வங்க தேச பிரீமியர் லீக்: ஏபி டி வில்லியர்ஸ் ஒப்பந்தம்

  டேவிட்   | Last Modified : 28 Oct, 2018 02:08 pm
ab-de-villiers-in-bangladesh-premier-league-cricket

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் வங்க தேச பிரீமியர் லீக்கில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

‘360 டிகிரி’ என்றுஅழைக்கப்படும் தென் ஆப்பிரிக்காவின் அபேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும்,  அதே சமயம்,  டி20 லீக் கிரிக்கெட்டில் விளையாடுவேன் எனவும் அறிவித்தார்.

இந்நிலையில் வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் விளையாட ரங்பூர் ரைடர்ஸ் அணி ஏபி டி வில்லியர்ஸ்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த அணியில் ஏற்கனவே கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மைதானத்தின் எந்த திசையிலும் பந்தை அடிக்கும் திறமை படைத்தவர் என்பதால் 360 டிகிரி என்று அழைக்கப்படுகிறார்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close