தொடர்ந்து 3 சதங்கள்... சச்சினை ஆச்சரியப்படுத்திய கோலி

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2018 04:51 pm
sachin-hails-virat-kohli

தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைகேப்டன் விராட் கோலி பெற்றுள்ளது குறித்து பாராட்டி சச்சின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்திய கேப்டன் விராட் கோலி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளில் முறையே 140, 157 ரன்கள் வீதம் குவித்தார். நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் (107 ரன்) விளாசினார். இதன் மூலம் 47 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் இலங்கையின் சங்ககரா (தொடர்ந்து 4 சதம்), பாகிஸ்தானின் ஜாகீர் அப்பாஸ், சயீத் அன்வர், தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ், டி வில்லியர்ஸ், குயின்டான் டி காக், நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், பாகிஸ்தானின் பாபர் ஆசம், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோருக்கு அடுத்து ஹாட்ரிக் சதம் அடித்த சாதனையாளராக கோலி திகழ்கிறார்.

இந்த சாதனையை நிகழ்த்திய விராட் கோலியை பலரும்பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.

 

 

அதில், "ஹாட்ரிக் சதம் என்ற அசத்தலான சாதனையை இந்த ஸ்பெஷல் வீரர் செய்துள்ளார்" என பதிவிட்டுள்ளார். மேலும் கோலி தனது சதத்தை கொண்டாடும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close