அணியிலிருந்து நீக்கப்பட்ட பின் தோனி என்ன செய்தார் தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 09:50 am
ms-dhoni-sweats-it-out-in-the-optional-net-session-in-mumbai

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தோனி நேற்று 45 நிமிடங்களுக்கு மேல் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி டிராவில் முடிந்தது. 3வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான 4வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. 

இதனையடுத்து டி20 தொடர் நடக்க இருக்கிறது. அந்த தொடருக்கான இந்திய அணியில் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், "இன்னொரு விக்கெட் கீப்பரை உருவாக்குவதற்காக தோனியை தேர்வு செய்யவில்லை" என்றார். 

இது தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தோனி மும்பையில் நேற்று 45 நிமிடங்கள் தொடர்ந்து பேட்டிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் பயிற்சியாளர் சஞ்சய் பங்கருடன் நீண்ட நேரம் தனது பேட்டிங் குறித்து பேசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

எனவே இன்றைய போட்டியில் தனது திறமையை நிரூபிக்க தோனி முயற்சிப்பார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close