4வது ஒருநாள்: ரோஹித் அதிரடி; மேற்கிந்திய தீவுகளுக்கு 378 ரன்கள் இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 05:54 pm
4th-odi-rohit-smashes-wi-out-of-the-park-378-target

இந்தியா - மேற்கிந்திய தீவுகளிடையே நடைபெற்று வரும் 4வது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் விளாசியுள்ளது. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியாவுக்கு ரோஹித் ஷர்மா அதிரடி துவக்கம் தந்தார். மறுமுனையில் தவான் 38 ரன்களிலும், கேப்டன் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ராயுடு, ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து 211 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். 4 சிக்ஸர், 20 பவுண்டரிகள் என ரோஹித் 162 ரன்கள் அடித்து கலக்க, ராயுடு சதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்துள்ளது இந்தியா. 

மேற்கிந்திய தீவுகளின் கேமர் ரோச் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். முதல் 3 போட்டிகள் முடிவில், தொடர் 1-1 என சமனாக உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெற்றும் அணிக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close