ரோஹித், ராயுடு அதிரடியில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்!

  shriram   | Last Modified : 29 Oct, 2018 08:40 pm
india-crush-wi-by-224-runs

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்தியா 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 377 ரன்கள் எடுத்தது. துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, 162 ரன்கள் விளாசினார். தவான் மற்றும் கோலி சொற்ப ரன்களில் அவுட்டானாலும், அடுத்து வந்த அம்பதி ராயுடு சதமடித்தார். 50 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்தது இந்தியா. 

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியாவின் சிறப்பான பீல்டிங்கால் ஆரம்பத்திலேயே ஆட்டம் கண்டது. கெய்ர்ன் பவல் 4 ரன்களுக்கும், ஷாய் ஹோப் 0 ரன்களுக்கும் அடுத்தடுத்து ரன் அவுட் செய்யப்பட்டார்கள். அடுத்து வந்த வீரர்களும், இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் ஜேசன் ஹோல்டர் அரைசதம் அடித்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால்,  மறுமுனையில் அவருக்கு ஈடுகொடுக்க யாருமே நிலைக்கவில்லை. 36.2 ஓவர்களில், 153 ரன்களுக்கு ஆல்  அவுட்டானது மேற்கிந்திய தீவுகள். 

224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் கலீல் அஹ்மத் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என்ற நிலையில் முன்னிலை பெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close