மேற்கிந்திய தீவுகள் வீரரை வம்புக்கு இழுத்த கலீல் அஹ்மதுக்கு ஐசிசி எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 30 Oct, 2018 06:37 pm
khaleel-ahmed-gets-reprimanded-for-samuels-incident

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டியில், எதிரணி வீரரை சீண்டிய இளம் இந்திய பந்துவீச்சாளர் கலீல் அஹ்மதுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது. அவருக்கு ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்ற 4வது போட்டியில், அசத்தலாக பந்துவீசி வெறும் 13 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார் இளம் பந்துவீச்சாளர் கலீல் அஹ்மத். 

எதிரணி வீரர் மார்லன் சாமுவேல்ஸின் விக்கெட்டையும் அஹ்மத் வீழ்த்தினார். விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில், பெவிலியன் நோக்கி சென்ற சாமுவேல்ஸை நோக்கி அஹ்மத் ஆக்ரோஷமாக கத்தினார். இது எதிரணி வீரரை சீண்டும் செயல் என நடுவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்திருந்தனர். இதனால், கலீல் அஹ்மத் மீது 'லெவல் 1' குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதன்படி, குறைந்தபட்சம் எச்சரிக்கை, அதிகபட்சம் 50% போட்டியின் சம்பளத்தில் அபராதம் என விதிக்கப்படும். பத்திரிகையாளர் சந்திப்பில், குற்றச்சாட்டை தான் ஒப்புக்கொள்வதாக அஹ்மத் தெரிவித்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர் மீது விசாரணை நடத்த தேவையில்லை என்று கூறிய ஐசிசி, அவருக்கு எச்சரிக்கையும், ஒரு டீமெரிட் புள்ளியும் வழங்கியுள்ளது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close