உலக கோப்பையை வெல்ல கோலிக்கு தோனி தேவை: முன்னாள் வீரர்

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 02:14 pm
ms-dhoni-an-absolute-must-for-2019-world-cup-gavaskar

2019ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல கோலிக்கு தோனி நிச்சயம் வேண்டும் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிக்கான இந்திய அணியை உருவாக்கும் முனைப்பில் பிசிசிஐ இருக்கிறது. இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பேட்டிங் கடந்த சில போட்டிகளில் பெரியளவில் ஜொலிக்காததால் அவர் தொடர்ந்த விளையாடுவதையும், உலகக் கோப்பை அணியில் தேர்வாவது குறித்தும் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

இந்நிலையில் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "விராட்டுக்கு தோனி தேவை. இதில் எந்த சந்தேகமும் இல்லை. 50 ஒவர் கிரிக்கெட்டில் செட்டில் ஆகி ஆடுவதற்கு கால அவகாசம் இருப்பதால் தோனி இங்குதான் முக்கியமானவராகத் திகழ்கிறார். போட்டியின் போது ஃபீல்ட்டிங்கில் சின்ன விஷயங்களையும் சரிசெய்வது, இந்தியில் வீரர்களுடன் பேசுவது, எப்படி பந்தை வீசுவது என பவுலர்களுக்கு கூறுவது என தோனியின் முக்கியத்தும் அதிகமாக இருக்கிறது. இது கோலிக்கு மிக பெரிய பலமாக இருக்கும். 

எனவே 2019 உலகக்கோப்பையில் தோனி விளையாட வேண்டும். ரோகித்தை பற்றியும் கூற வேண்டும். கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அவரின் புத்திசாலித்தனம் அதில் தெரிந்தது. ரஹானேவும் கூட கேப்டன்சி திறமைகள் உடையவர். ஆகவே கோலி சாய்ந்து கொள்ள மேலும் இரு தோள்கள் உள்ளன.

ஆகவே, தோனியை டி20 கிரிக்கெட்டில் இருந்து விடுவித்தது 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டை மனதில் கொண்டே என்று நான் நினைக்கிறேன்" என்றார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close