இந்தியா என்று சொல்லுங்கள்... என் பெயரை சொல்ல வேண்டாம்: ரோகித் சர்மா

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 02:21 pm
rohit-sharma-s-selfless-gesture

மும்பயைில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது ரோகித்தின் பெயரை கூறிக்கொண்டு ரசிகர்களிடம் ரோகித் வேண்டாம் என்று கூறினார்.

மும்பையில் கடந்த திங்கள் அன்று நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 4வது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி அடைந்தது. இந்த போட்டியில் 137 பந்துகளில் 162 ரன்கள் எடுத்து அசத்தினார் ரோகித் சர்மா. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. பின்னர் மேற்கிந்திய அணி பந்துவீசும் போது ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்து கொண்டு இருந்தார். 

அவர் பவுண்டரி லைனுக்கு அருகே நின்றுக்கொண்டு இருந்த போது பின்னாள் இருந்த ரசிகர்கள், "ரோகித், ரோகித்" என்று கத்தினர். அப்போது, ரோகித் அவர்களை நோக்கி தனது டி.சர்ட்டில் இருந்த இந்தியா என்ற வார்த்தையை காண்பித்து அப்படி கத்துங்கள் என்று கூறினார். 

உடனே சுற்றியிருந்த ரசிகர்கள் "இந்தியா... இந்தியா" என்று கத்தத் தொடங்கினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ரோகித்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close