தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகமான ரன்கள் எடுத்த நாள் இன்று!

  Newstm Desk   | Last Modified : 31 Oct, 2018 03:29 pm
on-this-day-in-2005-ms-dhoni-scored-his-career-best-183

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிகமான ரன்களான183 எடுத்தது குறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவுக்கூர்ந்துள்ளது. 

ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தகாரர் கேப்டன் கூல் தோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகி தற்போது விளையாடி வருகிறார். ஒருநாள் போட்டியில் தோனியின் அதிகமான ரன் 183. இதே நாளில் 2005ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோனி இதனை செய்தார். 

அந்தாண்டு இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் 3வது போட்டி ஜெய்பூரில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 4 விக்கெட்களை பறிக்கொடுத்து 298 ரன்கள் எடுத்திருந்தது. இதில் அந்த அணியின் சங்ககாரா 138 ரன்கள் எடுத்திருந்தார். 

பின்னர் விளையாடிய இந்திய அணியின் சச்சின் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட்டை இழக்க தோனி மட்டும் நிலையாக விளையாடினார். அவர் 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். இந்த போட்டியில் சச்சின் 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். 

 

 

இந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த நாளை நினைவு கூறும் வகையில் பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close