திருவனந்தபுரத்தில் நடக்கும் முதல் ஒருநாள் போட்டி: அறிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 09:10 am
first-odi-in-greenfield-international-stadium-thiruvananthapuram

கேரளாவின் திருவனந்தபுரத்தில் முதல் முறையாக நடக்கவுள்ள ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதுகின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. 

இதில் மேற்கிந்திய தீவுகள் அணி 1 போட்டியிலும், இந்தியா இரண்டு போட்டியிலும் வென்றுள்ளன. மேலும் ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் இன்று கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரம் கிரின்பீல்டு மைதானத்தில் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இன்றைய போட்டியின் சிறப்பம்சமே இன்று நடைபெற இருக்கும் போட்டி தான் அந்த மைதானத்தில் நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியாகும். இதற்கு முன்னர் அங்கு ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் நடந்துள்ளது. 

இந்த மைதானத்தை பற்றியும் இன்றைய போட்டியை பற்றியும் சில தகவல்கள்:

* இந்தியாவில் ஒரு நாள் போட்டி நடைபெறும் 47வது மைதானம் இதுவாகும். 

* 2015ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானத்தில் 55,000 அமர்ந்து போட்டியை பார்க்கலாம். 

* மல்டி பர்ப்பஸ் மைதானமான இதில் சர்வதேச கால்பந்து போட்டிகள் நடந்துள்ளன. 

* 2015ம் ஆண்டு நடந்த SAFF இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டிய காண 48,000 பேர் வந்திருந்தனர். 

* இந்தியாவின் முதல் பசுமை மைதானம் என்ற சிறப்பு இதற்கு உள்ளது.

* 2016ம் ஆண்டு இந்த மைதானத்திற்கு டேவிட் விக்கர்ஸ் விருது வழங்கப்பட்டது. 

* புதிய ஸ்டேடியத்தில் இந்திய அணி 43 போட்டியில் 23ல் வெற்றி பெற்றுள்ளது.

* 2017ம் ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இங்கு டி20 போட்டி நடந்தது. இதில் இந்தியா வெற்றி பெற்றது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close