கேரளாவை புகழும் கோலி, தோனிக்கு 35 அடி கட்வுட்: உற்சாகத்தில் ரசிகர்கள்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 10:34 am
kohli-about-kerala-35-ft-cut-out-for-dhoni

திருவனந்தபுரத்தில் இன்று முதல்  முறையாக ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அந்த பகுதி விழா கோலத்தில் உள்ளது. 

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டு வெற்றி, மேற்கிந்திய தீவுகள் ஒரு வெற்றி, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது.

இந்தியா 2-1 என முன்னிலையில் இருக்கும் நிலையில் 5வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி கேரளா சென்றுள்ளது. அங்கு சென்ற இந்திய அணிக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

கேரளாவை பற்றி அழகான குறிப்பு ஒன்றை எழுதி உள்ளார். அதில்,"கேரளாவில் இருப்பது எப்போதும் பேரின்பமான அனுபவம். இங்கு வருவதும், இங்கு கிடைக்கும் உற்சாகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் வந்து கேரளாவின் அழகை அனுபவிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைப்பேன். நான்இங்கு வரும் போதெல்லாம் எனக்கு எனர்ஜி தரும் கேரளாவுக்கு நன்றி"  என தெரிவித்துள்ளார். 

கோலியின் இந்த குறிப்பை அந்த மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் கடம்கம்பல்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கோலிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள தோனி ரசிகர்கள் சங்கம் சார்பில் திருவனந்தபுரம் வந்துள்ள தோனியை வரவேற்கும் வகையில் 35 அடி உயர கட்அவுட் வைத்து அசத்தியுள்ளனர். 

 

— Chennai Super Kings (@ChennaiIPL) October 31, 2018

 

இந்த கட்வுட் உருவாக்கப்படும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ளது. முன்னதாக திருவனந்தபுரத்திற்கு சென்ற இந்திய அணிக்கு அந்த மாநிலத்தின் பரம்பரிய வரவேற்பு வழங்கப்பட்டது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close