இன்னும் ஒரே ஒரு ரன்: புதிய சாதனையை படைக்கவிருக்கும் தோனி!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 11:28 am
ms-dhoni-just-a-single-away-from-reaching-a-historic-milestone-for-team-india

திருவனந்தபுரத்தில் இன்று நடக்கவிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோனி ஒரு ரன் அடித்தால் இந்தியாவுக்காக 10 ஆயிரம் ரன்னை தொடுவார்.

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இந்தியா இரண்டு வெற்றி, மேற்கிந்திய தீவுகள் ஒரு வெற்றி, ஒரு போட்டி டிராவில் முடிந்துள்ளது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி  திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இதுவரை 331 போட்டிகளில் விளையாடி 10,173 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஆசிய ஆசிய அணிக்காக அவர் எடுத்த 174 ரன்களும் அடங்கும். இதன்மூலம் அவர் இந்திய அணிக்காக மட்டும் தற்போது 9,999 ரன்களில் உள்ளார். 

இன்று நடக்கும் போட்டியில் அவர் 1 ரன் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 10,000 ரன்களை கடக்கும் 5வது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். மேலும் 51 ரன் எடுத்தால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆயிரம் ரன்னை தொடுவார்.

இதே போல பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் 2 விக்கெட் எடுத்தால் 100 விக்கெட்டை தொடுவார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close