ராகுல் டிராவிட்டுக்கு ஐசிசி கொடுத்த கௌரவம்: ஹால் ஆஃப் ஃபேம்மில் இணைந்தார்

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 04:36 pm
rahul-dravid-honoured-with-icc-hall-of-fame

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் இணைந்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் ராகுல் டிராவிட். தனது டிஃபென்டிங் ஸ்டைல் ஆட்டத்திற்காக மிகவும் பிரபலமான ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். இவர் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 13288 ரன்களும், 344 ஒருநாள் போட்டிகளில் 10899 ரன்களும் குவித்துள்ளார்.

இந்நிலையில் சச்சின், கங்குலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் கூட வாங்காத ஐசிசியின் மிக உயரிய ஹால் ஆஃப் ஃபேம் பெருமையை ராகுல் டிராவிட் தற்போது பெற்றுள்ளார். 

இன்று நடைபெற்ற இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி துவக்கத்தில், இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, இந்தியாவின் முன்னாள் வீரரும் ஏற்கனவே இந்த ஹால் ஆஃப் ஃபேம்  கௌரவத்தைப் பெற்றவருமான சுனில் கவாஸ்கர் இதற்கான விருதை டிராவிட்டிடம் வழங்கினார். 

 

 

இதுவரையில், இந்திய வீரர்களில் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷான் சிங் பேடி, அனில் கும்பளே உள்ளிட்ட வீரர்களே இந்த கௌரவத்தைப் பெற்றிருந்த நிலையில், ராகுல் டிராவிட் இந்த கௌரவத்தைப் பெறும் 5வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தற்போது ராகுல் டிராவிட் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, ஐசிசி வெளியிட்ட அறிவிப்பில், ராகுல் டிராவிட், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், முன்னாள் இங்கிலாந்து வீராங்கனை கிளாரி டெய்லர் ஆகியோர் கிரிக்கெட்டில் நிகழ்த்திய அளப்பரிய சாதனைகளுக்காக அவர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close