ஜடேஜா ஜாலம்; 104ல் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 04:15 pm
west-indies-all-out-for-104

இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில், ஜடேஜாவின் அசத்தல் பந்துவீச்சில், வெறும் 104 ரன்களுக்கு சுருண்டது மேற்கிந்திய தீவுகள்.

தொடரின் முதல் 4 போட்டிகள் முடிவில், இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இன்றைய போட்டியை வென்றால் இந்தியா தொடரை கைப்பற்றிவிடும். இந்நிலையில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் பேட்டிங் தேர்வு செய்தது. 

துவக்க வீரர் பவலும், முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹோப்பும் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானார்கள். இதனால் வெறும் 2 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து மோசமான துவக்கம் பெற்று தவித்தது மேற்கிந்திய தீவுகள். தொடர்ந்து களமிறங்கியவர்களில் மார்லன் சாமுவேல்ஸ் 24 ரன்களும், கேப்டன் ஜேசன் ஹோல்டர் 25 ரன்களும் எடுத்தனர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, 104 ரன்களில் ஆல் அவுட்டானது மேற்கிந்திய தீவுகள். 

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, 4 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close