ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத் தலைவர் திடீர் ராஜினாமா !

  டேவிட்   | Last Modified : 01 Nov, 2018 04:25 pm
australia-cricket-board-chairman-david-peever-resigned

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த டேவிட் பீவெர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ஆஸ்திரேலியா அணி, தென்ஆப்பிரிக்காவில் விளையாடும்போது கேப்டவுன் டெஸ்டில் பான் கிராப்ட், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினர்.  ஐசிசி அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, ஒன்றிரண்டு போட்டிகளில் தடைவித்தாலும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியமும் அவர்களுக்கு ஓராண்டு தடைவித்தது. அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என்று வலுயுறுத்தப்பட்டபோது,  ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதை நிராகரித்தது.

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கமும் தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியதிற்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது டேவிட் பீவெர் 2-வது முறையாக சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதால், டேவிட் பீவெர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைக்கால தலைவராக இயர்ல் எட்டிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close