மேற்கிந்திய தீவுகளை பந்தாடியது இந்தியா; 3-1 என தொடரிலும் வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 06:08 pm
5th-odi-india-crush-west-indies-to-grab-series-3-1

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்தியா விளையாடிய 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. ஒருநாள் தொடரையும் 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது.

4 போட்டிகள் முடிவில் 2-1 என முன்னிலை பெற்ற இந்தியா அணி, 5வது போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில், இன்று களமிறங்கியது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்த மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மேன், மளமளவென சரிந்தனர். 31.5 ஓவர்களில் 104 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது மேற்கிந்திய தீவுகள். 

தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, அரைசதம் அடித்து தனது சிறப்பான பார்மை மீண்டும் வெளிப்படுத்தினார். மற்றொரு துவக்க வீரரான தவான் 6 ரன்களிலேயே அவுட்டானாலும், கோலி - ஷர்மா  ஜோடி சேர்ந்து, 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தினர். 14.5 ஓவர்களிலேயே 105 ரன்கள் எடுத்து இந்தியா வென்றது. இந்தியாவுக்காக 4 விக்கெடகள் எடுத்த ரவீந்திர ஜடேஜா, ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close