தோனி, அசாருதீன் சாதனையை முறியடித்த கோலி!

  Newstm Desk   | Last Modified : 01 Nov, 2018 06:42 pm
kohli-breaks-dhoni-and-azhar-s-captainship-record

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்றதோடு, தொடர்ந்து உள்நாட்டில் நடைபெற்ற 5 ஒருநாள் தொடர்களை கைப்பற்றி, முன்னாள் கேப்டன்கள் அசாருதீன் மற்றும் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. வெறும் 15 ஓவர்களிலேயே இந்தியா 104 என்ற இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி, ஒருநாள் தொடரில் 3 சதங்கள் அடித்துள்ளார். 5 போட்டிகளில் மொத்தம் 453 ரன்கள் எடுத்து மீண்டும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் தானே, என நிரூபித்துள்ளார் கோலி. 

தனது தனிப்பட்ட சாதனைகள் போக, இந்திய கேப்டனாகவும் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார் கோலி. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் சேர்ந்து, கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற 5 ஒருநாள் தொடர்களை கோலியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன், முன்னாள் இந்திய கேப்டன்கள் அசாருதீன் மற்றும் தோனி, இந்தியாவில் நடைபெற்ற 4 ஒருநாள் தொடர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close