ஹே ஜடேஜா பலூனை உடை... ஜாலி மோட்டில் தல தோனி

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 10:10 am
ms-dhoni-pranks-rohit-sharma-after-odi-series-win

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தொடரை வென்ற கொண்டாட்டத்தின் போது கேக் வெட்டிய ரோகித்தை பலூன் உடைத்து பயப்பட செய்து தோனி விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

திருவனந்தபுரம் மைதானத்தில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பின் இந்திய அணி வீரர்கள் ஓட்டலில் உற்சாகமாக கொண்டாடினர். பிசிசிஐ அந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலிக்கு ஓட்டல் நிர்வாகம் சார்பில் பூங்கொத்து வழங்கப்படுகிறது. பின் துணை கேப்டன் ரோகித் சர்மா கேக் வெட்டுகிறார்.

அப்போது ரோகித்துக்கு பின்னால் நின்றிருந்த தோனி, அருகில் இருந்த ஜடேஜாவை அழைத்து ரோகித்தின் காதுக்கு அருகே பலூனை வெடி என்கிறார். ஜடேஜாவும் தோனியிடம் பலூனை வாங்கி ரோகித் சர்மாவின் காதுக்கருகே வெடிக்கிறார். கேக்கை வெட்டி கேதர் ஜாதவ்வின் முகத்தில் பூசி விளையாடிக் கொண்டு இருந்த ரோகித் அந்த சத்தத்தை கேட்டு பயந்து திரும்பி பார்க்கிறார். 

 

 

அதனைக்கண்டு தோனி வெடித்து சிரிக்கிறார். இந்த வீடியோவை தோனி ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close