நான் ஏன் பதிலளிக்க வேண்டும்: தோனி தேர்வாகாதது குறித்து கோலி!

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 11:46 am
virat-kohli-breaks-silence-on-ms-dhoni-s-ouster-from-t20i-squads-for-windies-australia-series

தோனி டி20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுந்த போது, அது குறித்து நான் ஏன் விளக்க வேண்டும்என்று கேப்டன் கோலி பதிலளித்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இதில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை கைப்பற்றியது. இந்நிலையில் வரும் 4ம் தேதி முதல் டி20 தொடர் நடக்க இருக்கிறது. கொல்கத்தாவில் இந்த போட்டி 7 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம் பெறவில்லை. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், "இன்னொரு விக்கெட் கீப்பரை உருவாக்குவதற்காக தோனியை தேர்வு செய்யவில்லை" என்றார். 

இது தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இந்திய கேப்டனட் விராட் கோலியிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த கோலி, "எனக்கு முன்பே இது குறித்து தேர்வாளர்கள் பேசிவிட்டனர் என்று நினைக்கிறேன். இதுகுறித்து நான் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. இந்த பேச்சுவார்த்தையின் போது நான் அங்கு இல்லை. தோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close