விக்கெட் கீப்பிங்கில் தோனியின் புதிய சாதனை: மார்க் பவுச்சரை பின்னுக்கு தள்ளினார்

  Newstm Desk   | Last Modified : 02 Nov, 2018 12:29 pm
ms-dhoni-creates-record-in-thiruvananthapuram-odi

எம்.எஸ். தோனி விக்கெட் கீப்பிங்கில் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தோனி தென்னாப்பிரிக்கா வீரர் மார்க் பவுச்சரை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறினார். 

தோனியின் பேட்டிங் திறமை குறித்து பல விமர்சனங்கள் தொடந்து வந்துக்கொண்டு இருக்கிறது. ஆனாலும் தோனி தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறார்.  இந்தாண்டு 20 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி 275 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தோனியின் சராசரி 25 ஆக இருக்கிறது. மேலும் ஸ்டிரைக் ரேட் 71.42ஆக உள்ளது. தோனியின் பேட்டிங்கை மட்டும் கணக்கில் கொண்டால் இது தோனிக்கு மோசமான ஆண்டு தான். 

ஆனால் தோனி அணியில் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கு, இப்போதைக்கு சரியான பதில் விக்கெட் கீப்பிங். 332 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள தோனி 425 விக்கெட்களை எடுத்துள்ளார். இதில் 310 கேட்ச்கள், 115 ஸ்டம்பிங்கள் அடங்கும். 

விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியில் சங்ககாரா 482 விக்கெட்களும், கில்கிரிஸ்ட் 472 விக்கெட்களும் எடுத்து முதல் இரண்டு இடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர் 423 விக்கெட்களுடன் இருந்தார். இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் தோனி அந்த இடத்தை பிடித்துள்ளார். வெறும் ஸ்டம்பிங் என்று பார்த்தால் தோனி தான் அந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் 99 விக்கெட்களுடன் சங்ககாரா இருக்கிறார். 

இந்நிலையில் தோனி இந்தியாவுக்காக 9999 ரன்கள் எடுத்துள்ள தோனி இன்னும் ஒரு ரன் எடுத்தால் பத்தாயிரம் ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை பெறுவார். இந்த சாதனையை அவர் நேற்றே நிகழ்த்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காததால் அந்த சாதனை தற்காலிகமாக தள்ளிப்போயுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close