கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் விராட் கோலி: கிரேம் ஸ்மித் புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 03 Nov, 2018 05:46 am
kohli-is-cricket-s-superstar-graeme-smith

சர்வதேச கிரிக்கெட்டின் சூப்பர்ஸ்டார் விராட் கோலி என்றும், டெஸ்ட் கிரிக்கெட்டை அழியும் நிலையில் இருந்து கோலி போன்ற சிறப்பான வீரரால் தான் மீட்க முடியும் என்றும், முன்னாள் தென்னாபிரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற ஜக்மோகன் டால்மியா வருடாந்திர சந்திப்பில் கலந்து கொண்டு தற்போதைய கிரிக்கெட் உலகின் நிலை குறித்து கிரேம் ஸ்மித் பேசினார். "கிரிக்கெட் உலகில் பெரிய சூப்பர்ஸ்டார்கள் மிக குறைவாக உள்ளனர். இங்கிலாந்தில் ஒன்றிரண்டு பேர் உள்ளனர். ஆனால், கோலி தான் அது. அதுவும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டி சிறப்பாக விளையாடி வருவது, டி20, ஒருநாள் போட்டிகள் அதிக அளவில் பார்க்கப்படும் இந்தியா போன்ற நாட்டில், டெஸ்ட் போட்டிகளின் மேல் புதிய ஆர்வத்தை ஏற்படுத்தும்" என்றார். 

"தொடர்ந்து ஒரு எடுத்துக்காட்டாகவும், சூப்பர்ஸ்டாராகவும் கோலி விளங்கும் பட்சத்தில், டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான ரசிகர்கள் ஆர்வத்தை தக்க வைக்க முடியும்" என்றும் ஸ்மித் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close