பஞ்சாப் அணியுடனான உறவை முடித்துக்கொண்டார் சேவாக்!

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 08:42 am
virender-sehwag-ends-his-association-with-kings-xi-punjab

ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் ஆலோசகர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் அறிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரோந்திர சேவாக், ஐ.பி.எல் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் சேவாக் பஞ்சாப் அணி ஆலோசகர் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

— Virender Sehwag (@virendersehwag) November 3, 2018

 

அந்த பதிவில், “எல்லா மகிழ்ச்சிகரமான நிகழ்வும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வரும். அது போல நான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2 சீசனில் விளையாடியுள்ளேன். அதே போல் ஒரு சீசனுக்கு அணி வீரர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டுள்ளேன். 

தற்போது பஞ்சாப் அணியின் உறவிலிருந்து விலகுகிறேன். இத்தனை ஆண்டுகளாக பஞ்சாப் அணியுடன் இருந்த நெருங்கிய உறவு முடிகிறது. பஞ்சாப் அணிக்கு மிக்க நன்றி, அந்த அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார். 

ஐ.பி.எல் 2018 வீரர்கள் ஏலத்தின் போது பஞ்சாப் அணியின் உறுமையாளர் பிரீத்தி சிந்தாவுக்கும் மனகசப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது குறிப்பிடதக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close