முதல் தர கிரிக்கெட்டில் இருந்து அம்பத்தி ராயுடு ஓய்வு

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 11:36 am
ambati-rayudu-retires-from-first-class-cricket

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அம்பத்தி ராயுடுவுக்கு இந்தாண்டு சிறப்பானதாகவே அமைந்துள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக ஏலம் எடுக்கப்பட்டார் அம்பத்தி ராயுடு. அதற்கு முன்பு மும்பை அணியில் இருந்த அவர் சென்னை அணிக்காக பல போட்டிகளில்  சிறப்பாக விளையாடி அசத்தினார். 

இதனையடுத்து அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராயுடு 2019 உலக கோப்பை போட்டியில் 4வது வீரராக களமிறங்குவார் என்று இப்போதே இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்  ராயுடு முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்துள்ளார். ராஞ்சி கிரிக்கெட் தொடரில் இரண்டாவது சுற்றில் இருந்து ஹைதராபாத் அணிக்காக அம்பத்தி ராயுடு விளையாட வேண்டும். ஆனால் ஹைதராபாத் கிரிக்கெட் வாரியத்துக்கு அவர் அளித்துள்ள கடித்தத்தில் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார். 

மேலும், "சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளில் நான் தொடர்ந்து விளையாடுவேன். இந்த தருணத்தில் பிசிசிஐ, ஹைதராபாத் கிரிக்கெட் வாரியம், பரோடா கிரிக்கெட் சங்ம் மற்றம் விதர்பா கிரிக்கெட் சங்கங்களுக்கு எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close