காயம் காரணமாக டி20ல் போட்டியிலிருந்து ரசல் விலகல்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 11:38 am
knee-injury-rules-andre-russell-out-of-t20i-series

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய ஆண்ட்ரு ரசல் தற்போது டி-20 தொடருக்கான அணியில் இருந்தும் விலகி உள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று நடக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவர் தொடரையாவது வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளது. டெஸ்டில் மோசமாக விளையாடிய அந்த அணி, ஒருநாள் தொடரில் 3 ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டிகளில் அந்த அணி சிறப்பாக விளையாட கூடியது.

இந்நிலையில், இந்தியாவுடனான டி-20 தொடரில் இருந்து  அந்த அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரு ரசல் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆண்ட்ரு ஒருநாள் தொடரில் சேர்க்கப்படவில்லை. டி-20 தொடருக்கான அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். காயம் குணமடையாததால் தற்போது டி-20 தொடரிலும் இருந்து விலகுகிறார். இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. எனினும் மேற்கிந்தி தீவுகள் அணி டி20 உலக கோப்பை போட்டி சாம்பியன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close