கிரிக்கெட்டின் தலைவன் கோலி: பிரையன் லாரா புகழாரம்

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 12:50 pm
virat-kohli-is-cricket-s-leader-at-the-moment-says-brian-lara

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி கிரிக்கெட் தலைவன் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி வீரருமான பிரையன் லாரா புகழ்ந்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் சாதனைகளை புரிந்து வருகிறார். இந்நிலையில் கோலி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா பேசும் போது, "கிரிக்கெட்டுக்கு தற்போது ஒரு தலைவன் கிடைத்துள்ளார். இன்றைய கிரிக்கெட்டில் விராட் கோலி எது செய்தாலும் அது பெரும் சாதனையாகவே உள்ளது. அவரது பேட்டிங், உடல்தகுதி,  மேலும் பல்வேறு விஷயங்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியவை ஆட்டத்துக்கு ஒரு பெரும் தலைவரை வழங்கியுள்ளதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

என்னையும் சச்சினையும் பற்றி நிறைய செய்திகள் ஒப்பிட்டு எழுதப்பட்டன. நாங்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கோலியும் இத்தகைய ஒப்பீடுகள் உள்ளிட்டவற்றுகு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் என்றே கருதுகிறேன்.

ஒப்பீடுகள் தவறானவை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் வளர்ச்சியடைந்தவர்கள், ஆனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொருவர் செய்யும் சாதனையும் தனித்துவம் வாய்ந்ததுதான், ஒப்பீடு என்பது அவசியம் இல்லாதது" என்றார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close