தோனி அணியில் இல்லாதது வருத்தம்தான்: டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 02:16 pm
dhoni-s-experience-will-be-missed-sharma

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி 20 தொடரில் தோனி இல்லாதது குறை தான் என்று தற்போதை டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடர் இன்று முதல் நடக்கிறது. கொல்கத்தாவில் நடக்கவிருக்கும் போட்டியில் இந்திய அணி கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய விக்கெட் கீப்பரை தேர்வு செய்வதற்காக தோனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா, "பல ஆண்டுகளாக இந்திய அணியின் பெரிய வீரராக இருப்பவர் தோனி. அவரது அனுபவம், களத்தில், விக்கெட் கீப்பிங் முக்கியமானது. தற்போது  அதை இழந்துள்ளோம், ஆனால்  ரிஷப் பண்ட், தினேஷ் இருவரும் விக்கெட் கீப்பர்கள், தங்களால் நிரூபிக்க முடியும் என்பதை இருவரும் செய்து காட்ட மீண்டும் அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறைந்த வீரர்களுடன் நாம் உலக கோப்பைக்கு செல்ல முடியாது. சில தேடல்கள் தற்போதைய நிலையில் நமக்கு தேவை. மேற்கிந்திய தீவுகள் அணியை அந்த  வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக ஆடியுள்ளார்கள். இந்த வடிவத்தை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆடி வருகிறார்கள். ஆகவே நமக்கு எளிதாக இருக்காது.

அவர்களது பலம் பலவீனங்களை அறிய வேண்டும். ஆனால் கவனம் நம் அணி மீதுதான் அவர்கள் மீது அல்ல. டி20யில் மேற்கிந்திய அணி அபாயகரமான அணி" என்றார். புதிய வீரர்கள் தங்களிடம் பங்களிப்பு செய்ய என்ன வைத்திருக்கின்றனர் என்பதை சர்வதேச போட்டியில்தான் முடிவு செய்ய முடியும், அதுவும் உலகக்கோப்பை இருக்கும் போது வெறும் 15 வீரர்கள் போதாது அந்த 15க்கு வெளியேயும் உள்ள திறமைகளை ஊக்குவிக்க வேண்டும்.

தலைமைப் பொறுப்பு என் ஆட்டத்தை வளர்த்துள்ளது மட்டுமல்ல எனக்கான பொறுப்பையும் அதிகமாக்கி உள்ளது. இருந்தபோதிலும் நான் முதலில் ஒரு வீரர் அதன் பிறகுதான் கேப்டன்" என்று கருத்து தெரிவித்துள்ளார் ரோஹித் சர்மா.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close