109 ரன்களில் சுருண்டது மேற்கிந்திய தீவுகள்!

  Newstm Desk   | Last Modified : 04 Nov, 2018 08:43 pm
west-indies-score-109-8-in-first-t20

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 109 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. குல்தீப் யாதவ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே மேற்கிந்திய தீவுகள் தடுமாறியது. துவக்க வீரர்கள் ஹோப் 14 ரன்களிலும்,  ராம்தின் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து மோசமான துவக்கம் தந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. குல்தீப் யாதவின் சூப்பர் பந்துவீச்சில், மிடில் ஆடர் பேட்ஸ்மேன்கள் பிராவோ(5), பவல்(4) மற்றும் ப்ராத்வைட்(4) ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர்.

6வது விக்கெட்டுக்கு வந்த ஆலன், அதிகபட்சமாக 27 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே அடித்தது மேற்கிந்திய தீவுகள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close