முதல் டி20: இந்தியா போராடி வெற்றி

  shriram   | Last Modified : 04 Nov, 2018 10:32 pm
india-beat-wi-by-5-wickets

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் , இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற இந்திய அணி, முதல் டி20 போட்டியில் இன்று மேற்கிந்திய தீவுகளுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் வீரர்கள், இந்திய பந்துவீச்சில் தடுமாறினர்.

அதிகபட்சமாக அந்த அணியின் ஆலன், 27 ரன்கள் மட்டுமே எடுத்தார். 20 ஒவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்தது மேற்கிந்திய தீவுகள்.

எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் சொதப்பினர். கேப்டன் ரோஹித் ஷர்மா 6 ரன்களிலும் ஷிகர் தவான் 3 ரன்களிலும் அவுட்டானார்கள். அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் நடையை கட்டினர். 

4வது, 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தினேஷ் கார்த்திக்(31) மற்றும் க்ருனால் பாண்ட்யா(21) சிறப்பாக விளையாடி, இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 17.5 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசாத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close