ஐபிஎல்: ஹைதராபாத் நட்சத்திர வீரர் தவானை வாங்கியது டெல்லி!

  shriram   | Last Modified : 05 Nov, 2018 10:17 pm
sunrisers-hyderabad-trade-dhawan-with-delhi-daredevil-s

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிகர் தவானை, அவரது சொந்த ஊர் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் 3 வீரர்களை கொடுத்து அடுத்த ஐபிஎல் சீசனுக்காக வாங்கியுள்ளது.

2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் டெல்லி அணிக்காக விளையாடிய தவான், அதன் பின் ஹைதராபாத் சென்றார். ஹைதரபாத்தின் முன்னணி வீரராக வளர்ந்தார். பின்னர் இந்திய அணியின் துவக்க வீரராகவும் உயர்ந்தார். ஐபிஎல்லின் சிறந்த துவக்க வீரர்களுள் ஒருவராக கலக்கி வரும் தவானை டெல்லி டேர்டெவில்ஸ் அணி தற்போது வாங்கியுள்ளது.

டெல்லி ஊர்க்காரரான தவானுக்கு நிச்சயம் டெல்லி ரசிகர்கள் அட்டகாசமான வரவேற்பு வழங்க காத்திருப்பார்கள். அவருக்கு பதில், விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, நதீம் ஆகிய மூன்று வீரர்களையும் ஹைதரபாத்திற்கு டெல்லி வழங்கியுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close