ரோஹித் சதம்; இந்தியா 195/2

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 09:05 pm
rohit-scores-ton-india-195-2

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா சதம் அடித்து சாதனை படைக்க, 2 விக்கெட் இழந்து இந்தியா 195 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 43 ரன்கள் அடித்தார்.

லக்னோவில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியாவின் துவக்க வீரர் கேப்டன் ரோஹித் ஷர்மா, எதிரணி பவுலர்களை பந்தாடினார். 61 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரி என ரோஹித் அதிரடி காட்டி, 111 ரன்கள் விளாசினார்.  சர்வதேச டி20-யில் ரோஹித் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். மறுமுனையில் ஷிகர் தவான் 43  ரன்கள் அடித்தார். 

20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 195 என்ற வலுவான ஸ்கோரை இந்திய அணி எட்டியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close