71 ரன்களில் இந்தியா அபார வெற்றி; டி20 தொடரையும் கைப்பற்றியது!

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 10:50 pm
india-beat-west-indies-by-71-runs-win-series

ரோஹித் ஷர்மாவின் அதிரடி சதத்தால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரையும் இந்தியா 2-0 என கைப்பற்றியுள்ளது. 

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. முதல் பேட் செய்த இந்தியா, கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துவக்க வீரர் தவானின் அதிரடி ஆட்டத்தால் நல்ல துவக்கம் பெற்றது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் 123 ரன்கள் சேர்த்தனர். 61 பந்துகளில் ரோஹித் 111 ரன்கள் அடித்தார். 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது இந்தியா. 

கடினமான இலக்கை சேஸ் செய்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் மீண்டும் மோசமான துவக்கம் பெற்றது. எந்த வீரரும் நிலைக்காமல், தொடர்ந்து விக்கெட்கள் வீழ்ந்தன. அதிகபட்சமாக டேரன் பிராவோ 23 ரன்களும், கீமோ பால் 20 ரன்கள் மட்டுமே அடித்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு, 124 ரன்கள் மட்டுமே எடுத்தது மேற்கிந்திய தீவுகள். 71 ரன்களில் இந்தியா அட்டகாச வெற்றி பெற்றது. 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்தியா வென்ற நிலையில், தற்போது டி20 தொடரையும் 2-0 என வென்றுள்ளது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close