இந்த அவமானம் உங்களுக்கு தேவையா, விராட் கோலி?

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 02:40 am
kohli-gets-trolled-back-in-sharriyan

இந்திய அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, சமூக வலைதளத்தில் ரசிகரின் கருத்துக்கு பதிலளித்து பேசிய விதம் கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், தேவையில்லாமல் பேசிவிட்டதாகே அப்போது ஒப்புக்கொண்டுள்ளார். 

மைதானத்திலேயே, தன்னை சீண்டும் எதிரணி வீரர்களை மிக ஆக்ரோஷமாக எதிர்கொள்பவர் கேப்டன் விராட் கோலி. இந்நிலையில், அவரது சமூக வலைதள கணக்கில் ஒருவர், "கோலியின் திறமையை எல்லோரும் மிகைப்படுத்துகின்றனர். அவரது பேட்டிங்கில் ஒரு சிறப்பும் இல்லை. இந்த் இந்தியர்களை பார்ப்பதற்கு பதிலாக, நான் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களின் பேட்டிங்கை ரசிப்பேன். 

இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த கோலி, "நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்கிறீர்கள். வேறு நாட்டிற்கு செல்ல வேண்டியது தானே. எப்படி நம்ம நாட்டில் வாழ்ந்து கொண்டே மற்ற நாடுகளை விரும்ப முடிகிறது" என்றார் . 

நாட்டை விட்டு வெளியேறுங்கள் என கோலி கூறிய கருத்துக்கு, சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து ட்விட்டரில் பேசிய கோலி, "என்னால் யாரையும் கலாய்க்க முடியாதா? கலாய் வாங்குவது மட்டும் தான் எனக்கு போல?  இந்த இந்தியர்கள் என ஏளனமாக பேசியதற்கு பதிலளிக்கவே இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close