ஐ.பி.எல்லில் வேகபந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு: கோலியின் கோரிக்கைக்கு பிசிசிஐ மறுப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 09:05 am
virat-kohli-s-proposal-of-resting-the-fast-bowlers

அடுத்தாண்டு ஐ.பி.எல் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் கோரிக்கைக்கு பிசிசிஐ ஒப்புதல் அளிக்க முடியாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் அடுத்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடைபெறுவதால் 2019 ஐ.பி.எல் தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்திருந்தார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சிஓஏ உடனான கூட்டத்தில் கோலி இந்தக் கோரிக்கையை வைத்தார், குறிப்பாக பும்ரா, புவனேஷ்வர் ஆகியோரை 2019 ஐ.பி.எல்லில் முழுதுமாக விடுவிக்க வேண்டும் என்று கோலி கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் விராட் கோலியின் இந்தக் கோரிக்கையை அணி உரிமையாளர்கள் ஏற்க மாட்டார்கள் என்று பி.சி.சி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. “ஐ.பி.எல் கிரிக்கெட் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே. 19ம் தேதி நிறைவடைகிறது. இருந்தாலும் உலகக்கோப்பையில்  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் போட்டிக்கு 15 நாட்கள் இடைவெளி உள்ளது. ஜூன் 5ம் தேதி தென்னாப்பிரிக்காவுடன் முதல் போட்டி நடக்கிறது.  எனவே வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஐபிஎல்லிருந்து ஓய்வு அளிக்க வேண்டும் என்பதற்கு வாய்ப்பேயில்லை” என்று கூட்டத்தில் இருந்த மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் கருத்தை ஏற்கவில்லை என்று அதே அதிகாரி கூறிய போது,  மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும்போது அல்லது இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும்போது பும்ரா உடற்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் அவருக்கு ஓய்வு அளிக்க மாட்டோம் என்று ரோஹித் சர்மா அதே கூட்டத்தில் கூறியதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், விராட் கோலியின் கோரிக்கை வழக்கத்துக்கு விரோதமானது என்று விமர்சித்தார். வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லா போட்டிகளிலும் எப்படியிருந்தாலும் ஆடப்போவதில்லையே என்கிறார் இன்னொரு அதிகாரி.

அதாவது புவனேஷ்வர், பும்ரா, ஷமி, உமேஷ், கலீல் அகமெட் ஆகியோர் அனைத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடப்போவதில்லை, மேலும் ஐபிஎல் அணிகளிலும் சிறந்த உடற்தகுதி நிபுணர்கள் உள்ளனர் என்று பிசிசிஐ தரப்பு உணர்வதாகத் தெரிகிறது.

மேலும், விராட் கோலி, தன் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஷ்குமார், பும்ராவுக்கு ஓய்வு அளிக்கக் கோருவது எதிராகவும் போக வாய்ப்புள்ளது, 2 மாதங்கள் எந்த பயிற்சியும் இல்லாமல் போய்விடும் என்று பி.சி.சி.ஐ தரப்பு எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close