பெண்கள் T-20 உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்

  டேவிட்   | Last Modified : 09 Nov, 2018 09:06 am
women-s-t-20-cricket-india-vs-new-zealand

  வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்கவுள்ள 10 அணிகளுக்கு இடையிலான பெண்கள் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்துடன் மோதுகிறது. 

பெண்களுக்கான 6-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்கி வரும் 24-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
தொடக்க நாளான இன்று மூன்று ஆட்டங்கள் நடக்கின்றன. புரோவிடென்சில் நடைபெறவுள்ள முதலாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இந்த ஆட்டம் இன்றிரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்-வங்கதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி மற்ற ஆட்டங்களில் 11-ந்தேதி பாகிஸ்தானையும், 15-ந்தேதி அயர்லாந்தையும், 17-ந்தேதி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்கிறது.  நடுவர்களின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் முதல்முறையாக பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close