நாங்கள் ரசிகர்களை மதிக்கிறோம்: கோலி கருத்துக்கு பிசிசிஐ அதிருப்தி

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 10:51 am
virat-kohli-may-have-violated-his-central-contract-with-leave-india-statement

ரசிகரின் கேள்விக்கு கோலி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

இன்றைய தினம் சர்வதேச அளவில் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர் விராட் கோலி. ஒரு பக்கம் இவர் கொண்டாடப்பட்டாலும், சமீபத்தில் அவர் கூறிய கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

தனக்கு வெளிநாட்டு கிரிக்கெட் வீரரை தான் பிடிக்கும் என்று கூறிய ரசிகர் இந்திய நாட்டில் இருக்க கூடாது என்று கூறினார். இதற்கு பலரும் எதிர்ப்பு எதிரிவித்து வருகின்றனர். தான் விளையாட்டாக தான் இவ்வாறு கூறியதாக அவர் விராட் விளக்கம் அளித்துள்ளார். 

இந்நிலையில் விராட் கோலியின் கருத்துக்கு பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அனிருத் சவுத்ரி கூறுகையில், ‘கிரிக்கெட் வாரியம் ரசிகர்களை மதிக்கிறது. அவர்களின் தேர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். நான் சுனில் கவாஸ்கர் பேட்டிங்கை ரசிப்பேன். அதோடு விவியன் ரிச்சட்ஸ், கிரீனிட்ஸ், தேஷ்மண்ட் ஹெய்ன்ஸ் ஆடுவதையும் ரசிப்பேன். சச்சின், சேவாக்கை போலவே மார்க் வாஹ், பிரையன் லாரா உட்பட பலரின் ஆட்டங்களை ரசிப்பேன். நாடு மற்றும் அரசியலைக் கடந்தது சிறப்பான கிரிக்கெட்டை மதிக்கும் பண்பு வேண்டும் என நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close