3வது டி20: 3 பந்து வீச்சாளர்களுக்கு ரெஸ்ட்

  Newstm Desk   | Last Modified : 09 Nov, 2018 01:24 pm
bcci-rest-three-players-for-the-third-t20

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பும்ரா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் தற்போது டி20 போட்டிகள் நடந்து வருகிறது.  இதில் முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று விட்டது. இந்நிலையில் வரும் ஞாயிற்று கிழமை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பந்துவீச்சாளர்கள் உமேஷ் யாதவ்,  குல்திப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியின் இருந்து நீக்கப்பட்டு அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும் சித்தார்த் கவுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

அணி விவரம்: ரோகித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், குருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், புவனேஷ்வர் குமார், கலீல் அஹ்மத்,நதீம், சித்தார்த்த கவுல்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close