இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவித்த சேவாக்!

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 01:34 pm
sehwag-wishes-to-indian-women-cricket-team-and-congragulate-to-harmanpreet-kaur

நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் விரேந்தர் சேவாக், வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீசில் நேற்று தொடங்கிய மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. இதன்மூலம் டி20 உலக கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் எடுத்து இந்திய அணி சாதனை படைத்தது. அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 160 ரன்களே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதில் அதிரடியாக விளையாடிய ஹர்மன்பிரீத்கவுர் 51 பந்தில் 8 சிக்ஸர், 7 பவுண்டரி உள்பட 103 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 போட்டியில் முதல் சதம் அடித்த இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஹர்மன்பிரீத்கவுர். மேலும்,  சர்வதேச அளவில் டி20 போட்டியில் சதமடித்த 3வது வீராங்கனை என்ற பட்டத்தை பெற்றார். 

இதுகுறித்து இந்திய அணிக்கும், ஹர்மன்பிரீத்கவுருக்கும் விரேந்தர் சேவாக் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், ஹர்மன்பிரீத், தீபாவளி பரிசு அளித்துள்ளதாக கூறியுள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close