மகளிர் உலக கோப்பை டி20 போட்டி: இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்!

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 12:16 pm
t20-world-cup-india-pakistan

உலக கோப்பை டி20  தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

10 நாடுகள் பங்கேற்ற மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. அந்த அணி நியூசிலாந்தை 34 ரன்னில் வீழ்த்தியது.

இந்திய அணி 2வது ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. பலவீனமான நிலையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி 2வது வெற்றி பெற அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

இந்த போட்டி கயானாவில் உள்ள பிரோவிடன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close