ரோகித் சர்மா நெருங்கி இருக்கும் புதிய சாதனை: இன்னும் 69 ரன்கள் தேவை!

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 01:00 pm
rohit-sharma-69-runs-away-from-making-history-in-t20i-cricket

ரோகித் சர்மா இன்னும் 69 ரன்கள அடித்தால் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைப்பார். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. இதில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்றது. 

தற்போது டி20 போட்டிகள் நடந்து வருகின்றனர். இதில் முதல் இரண்டு போட்டியிலும் இந்தியா அசத்தலாக விளையாடி வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது. 

இந்த தொடரில் டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் 69 ரன்கள் எடுத்தால் டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார். 

இந்த பட்டியலில் தற்போது 2271 ரன்களுடன் நியூசிலாந்து அணி மார்டின் குப்தில் முதல் இடத்தில் உள்ளார். ரோகித் இருக்கும் ஃபார்மில் அவர் நிச்சயமாக  இந்த சாதனையை எளிதாக செய்வார் என்றே எதிர்பார்கக்ப்படுகிறது. 

newstm.in


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close