கேப்டனாக ரோகித் சர்மா செய்திருக்கும் புதிய சாதனைகள்

  Newstm Desk   | Last Modified : 12 Nov, 2018 03:13 pm
rohit-sharma-creats-new-captaincy-records

சென்னையில் நடந்த டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் கேப்டனாக ரோகித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2 டி20 தொடர்களில் ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோகித் பெற்றுள்ளார். இதற்கு முன் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டி20 தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றது. 

இதே போல ரோகித் சர்மா இது வரை 12 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.  இதில் 11 போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. இதன் மூலம் கேப்டனாக முதல் 12 போட்டிகளில் அதிகமாக வென்றவர் என்ற சாதனையும் ரோகித் வசம் சென்றுள்ளது. 

இந்த பட்டியலில் சோயப் மாலிக், மைக்கெல் கிளார்க், அஸ்கார் ஸ்டானிக்சாய் மற்றும் சர்பராஸ் அகமது ஆகியோர் 10 போட்டிகளில் வென்றுள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close