'பாகிஸ்தான் இருக்கும் நிலைமைக்கு இப்போ காஷ்மீர் தேவைதானா?' - அஃப்ரிடி

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 05:38 am
pakistan-cannot-manage-kashmir-shahid-afridi

உள்நாட்டில் இருக்கும் நான்கு மாகாணங்களையே பாகிஸ்தானால் சரியாக பார்த்துக் கொள்ள முடியாத நிலையில், காஷ்மீரை எப்படி கவனித்துக் கொள்ள முடியும், என கேள்வி எழுப்பியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி.

நீண்டகாலமாக நடந்துவரும் இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையின் மையப்புள்ளியாக விளங்கும் காஷ்மீர் குறித்து நட்சத்திர பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி பேசினார். பிரிட்டன் சென்றுள்ள அவர், அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் மாணவர்கள் முன்னிலையில் பேசினார். அப்போது, "இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்குமே காஷ்மீரை வழங்கக்கூடாது. காஷ்மீர் சுதந்திரமாக இருக்க வேண்டும். பாகிஸ்தானால் தன்னுடைய 4 மாகாணங்களையே கவனித்துக் கொள்ள முடியவில்லை. எப்படி காஷ்மீரை கவனித்துக் கொள்ள முடியும்? மக்கள் அங்கு இறந்து வருகிறார்கள். இது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். எந்த சமூகமாக இருந்தாலும், எந்த மக்களாக இருந்தாலும் ஒரு மரணம் என்பது மிகவும் கொடூரமானது" என பேசினார்.

அரசியலில் வருவதற்கு தனக்கு ஆர்வம் இல்லை எனக் கூறிய,  அஃப்ரிடி, முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான்கான், ஊழலை ஒழிப்பதிலும், கிராம பகுதிகளுக்கு கல்வியை கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்த வேண்டும், என கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் அவர் கூறிய கருத்துக்கள் சமூகவலைதளங்களில் பாகிஸ்தானியர்கள் மத்தியில் கடும் கண்டனத்துக்கு உள்ளானது. இதை தொடர்ந்து, தான் சொன்னதை இந்திய ஊடகங்கள் தவறாக திரித்து காட்டுவதாக அஃப்ரிடி தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் பாகிஸ்தான் என்றும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close