2019 ஐ.பி.எல்: சென்னை அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட 3 வீரர்கள்

  Newstm Desk   | Last Modified : 15 Nov, 2018 12:06 pm
csk-releases-three-players-ahead-of-ipl-auction

விரைவில் ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடக்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து 3 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். 

12வது இந்தியன் பிரீமியர் லீக் தொடர் அடுத்தாண்டு நடக்கவிருக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு பிற வீரர்களைக் கழற்றிவிட முடிவு செய்துள்ளன. அடுத்த மாதம் நடைபெறும் ஏலத்தில் புதிய வீரர்கள் தேர்வு நடைபெறும். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அடுத்த சீசனுக்கு தயாராகும் வகையில் 3 வீரர்களைக் அணியில் இருந்து கழற்றிவிட்டு , 22 வீரர்களைத் தக்கவைத்துள்ளது.

இதன்படி கடந்த சீசனில் விளையாடிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட், உள்நாட்டு வீரர்கள் கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோர் சென்னை அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டுள்ளனர். இதில் மார்க் வூட் கடந்த சீசனில் ஒருபோட்டியில் மட்டும் விளையாடினார். அதில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் கொடுத்தார். அதேசமயம், கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகியோருக்கு ஒருபோட்டியில் கூட வாய்ப்பு அளிக்காமல் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற கேதார் ஜாதவ் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். இவருக்குப் பதிலாக இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி சேர்க்கப்பட்டார். அடுத்த சீசனுக்கு இருவரும் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், முக்கிய வீரர்களான கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். நியூசிலாந்து வீரர் மிட்ஷெல் சான்ட்னர் காயம் காரணமாக விலகிய நிலையில், அவரை மீண்டும் சேர்ப்பது குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close