மகளிர் டி20 உலகக் கோப்பை: அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது இந்தியா

  Newstm Desk   | Last Modified : 16 Nov, 2018 05:11 am
women-s-world-t20-india-beat-ireland-to-enter-semifinals

இந்தியா அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், அயர்லாந்தை 52 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய மகளிர் அணி.

தென்னமெரிக்க நாடான கயானாவின் தலைநகர் ஜார்ஜ்டவுனில் நடைபெற்று வரும் ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின், குரூப் போட்டியில் அயர்லாந்து - இந்திய அணிகள் நேற்று மோதின. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 2 போட்டிகளிலும் தோற்ற அயர்லாந்துடன் மோதியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் விளாசியது. கேப்டன் மித்தாலி ராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடி, 51 பந்துகளில் 56 ரன்கள் அடித்து இந்தியாவுக்கு கைகொடுத்தார்.

தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. முக்கியமாக சுழற்பந்து வீச்சாளர்கள் ராதாரவி சர்மா 3 விக்கெட்களும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்களும் எடுத்தனர். 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் மட்டுமே எடுத்தது அயர்லாந்து. 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. கடைசி குரூப் போட்டியில், அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட மற்றொரு அணியான ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close