இலங்கை- இங்கிலாந்து 2வது டெஸ்ட்: அதிரடி காட்டும் இலங்கை!

  Newstm Desk   | Last Modified : 17 Nov, 2018 01:42 pm
england-vs-srilanka-2nd-test-update

பல்லேகலேயில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 301 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இலங்கை 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 

இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பல்லேகலேயில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன்களும், இலங்கை முதல் இன்னிங்சில் 336 ரன்களும் எடுத்தன. 46 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 324 ரன் எடுத்து இருந்தது.

இன்று 4வதுநாள் ஆட்டம் நடந்தது. இங்கிலாந்து அணி மேலும் 22 ரன் எடுத்து 346 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் இலங்கைக்கு 301 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

முதல் டெஸ்டில் இங்கிலாந்து 211 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close