மகளிர் 20 ஓவர் உலககோப்பை: அரையிறுதியில் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து 

  டேவிட்   | Last Modified : 17 Nov, 2018 06:51 pm
west-indies-england-in-women-s-20-semi-finals

வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

6-வது மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் வெஸ்ட்இண்டீஸ்- இலங்கை அணிகள் மோதின.

முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி 17.4 ஓவர்களில் 104 ரன் எடுத்தது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் 83 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட்இண்டீஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தை 60 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 31 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியுள்ளது.  ‘ஹாட்ரிக்’ வெற்றி மூலம் வெஸ்ட்இண்டீஸ் அரை இறுதிக்கு தகுதி பெற்றது. அந்த அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது.  முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 19.3 ஓவர்களில் 85 ரன்னில் சுருண்டது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 14.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

‘பி’ பிரிவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. இதனால் வெற்றி பெறும் அணி அந்த பிரிவில் முதல் இடத்தை பிடிக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close