கடந்த முறை போல இருக்காது: ஆஸ்திரேலியாவில் ரோஹித் ஷர்மா

  Newstm Desk   | Last Modified : 19 Nov, 2018 07:37 pm
won-t-be-like-last-time-rohit-sharma

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி, இந்த முறை நிச்சயம் வெற்றி பெறும், என துணை கேப்டன் ஷர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இருதரப்பு கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி நாட்டிற்கு சென்றுள்ளது. 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி விளையாடுகிறது. கடந்தமுறை ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றபோது, 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடியது. இதில், 5 போட்டிகளிலும் இரு அணிகளும் சுமார் 300 ரன்கள் அடித்தன. ஆனால், 3 போட்டிகளிற்கு ஆஸ்திரேலியா நூலிழையில் வென்று, தொடரை 4-1 என கைப்பற்றியது. 

இது தொடர்பாக பேசிய இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, கடந்த முறை போல இல்லாமல் இந்த முறை நிச்சயம் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி மூன்று விதமான போட்டிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். "கடந்த முறை இங்கு வந்து பல போட்டிகள் நூலிழையில் முடிந்தன. அது போல இல்லாமல், இந்த முறை நிச்சயம் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். வீரர்கள் மத்தியில் மூன்று தரப்பிலுமே ஒரு நல்ல நம்பிக்கை இருந்து வருகிறது. அவர்களை நல்லவிதமாக ஊக்குவித்து, முக்கியமான தருணங்களில் சிறப்பாக விளையாடி, எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு" என்று கூறினார்.

மேலும் ஆஸ்திரேலியா போன்ற இடத்திற்கு வந்து நன்றாக விளையாடும் போது அணிக்கு அது மிகப்பெரிய உத்வேகமாக அமையும் என்றும் ரோஹித் கூறினார். 

நாளை மறுநாள் துவங்கும் டி20 தொடரின் முதல் போட்டியில், பிரிஸ்பேன் மைதானத்தில்  ஆஸ்திரேலியாவை இந்தியா எதிர்கொள்கிறது. 

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close