அவர் நினைப்பதை எல்லாம் செய்கிறார்: கோலியை சாடிய முன்னாள் வீரர்

  Newstm Desk   | Last Modified : 20 Nov, 2018 12:47 pm
one-person-is-doing-all-he-wants-bishan-singh-bedi-hits-at-virat-kohli

அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், கோலியை கடுமையாக சாடியுள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே அந்த பதிவியில் இருந்து கடந்தாண்டு விலகினார். இதற்கு அவருக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே நடந்த பிரச்னை தான் காரணம் எனக் கூறப்பட்டது. 

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அணி வீரர்களுக்கும் அப்போதைய தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேவிற்கும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்பட்டது. 

அதன் பின்னர் அனில் கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். அப்போது இந்திய அணி கேப்டனுக்கு என்னுடைய பயிற்சியில் விருப்பமில்லை என்று தெரிவித்தார். அவர் பதவி விலகிய சில நாட்களில் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கும் கோலி தான் காரணம் என கூறப்பட்டது. 

இது முன்னாள் கிரிக்கெட்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்றளவும் இதுகுறித்து பலரும் பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கோலியை கடுமையாக சாடி உள்ளார். 

அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ஒருவர் தான் நினைப்பத்தை மட்டும் தொடர்ந்து நடத்தி வருகிறார். கோலிஅதனை அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம். 

இந்தியா சிறப்பான அணியாக இருக்கிறது. இதனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இதே அணி தான் இங்கிலாந்திலும், தென்னாப்பிரிக்காவிலும் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் இரண்டு முக்கிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் இருவர் மட்டும் மொத்த அணியில்லை. நமது அணி ஒருவரை மட்டும் நம்பி இருக்கிறார். கோலி தான் எல்லாமுமாக இருக்கிறார். அவர் மீது அதிகப்படியான அழுத்தத்தை தருகிறோம்" என்றார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close