ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20யில் தோனி இல்லை: என்ன செய்வார் கோலி

  Newstm Desk   | Last Modified : 21 Nov, 2018 03:11 pm
why-virat-kohli-will-miss-ms-dhoni-during-india-australia-t20i-series

இன்று தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் தோனி இல்லாத நிலையில் கோலியின் வெற்றி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இன்று பிரிஸ்பேனில் முதல் டி20 போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி சேர்க்கப்படவில்லை. முன்னரே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து தோனி அதிரடியாக நீக்கப்பட்டார். புதிதாக ஒரு விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தேர்வுக்குழு தலைவர் தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் தோனியில்லாத இந்திய டி20 அணி இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. நிச்சயமாக தோனியின் அனுபவத்தை கோலி மிஸ் செய்வார் என்று ரசிகர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் கூறி வருகின்றனர். 

இதற்கு காரணம் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்தாலும் போட்டியின் போது தொடர்ந்து கோலிக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இங்கிலாந்தில் நடந்த டி20 போட்டியில் விளையாடும் போதுக்கூட தோனியின் ஆலோசனை கோலிக்கு தேவைப்பட்டது. 

இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் புதிய கிரிக்கெட் காலம் தொடங்க உள்ளது என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close