தோல்விக்கு இது தான் காரணம்...: விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 22 Nov, 2018 10:30 am
rishabh-pant-s-dismissal-was-turning-point-says-virat-kohli

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ரிஷப் பந்த்தின் விக்கெட் பறிப்போனது தான் காரணம் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியடைந்தது. 

இந்த தோல்விக் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, "இது மிகவும் நெருக்கமாக வந்து தோற்ற போட்டி. இழுபறியாக சென்ற இந்த ஆட்டம் ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ரசிகர்கள் உற்சாகம் அடைந்திருப்பார்கள்.

நாங்கள் சிறப்பான வகையில் பேட்டிங்கை தொடங்கினோம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொதப்பியதால் ரன் குவிப்பு ஸ்தம்பித்தது. இறுதியில் ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் களத்தில் இருக்கும்போது வெற்றி பெற முடியும் என்று நினைத்தோம். ஆனால் ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் மீண்டும் பின்தங்கிவிட்டோம்.

தொடக்க பேட்ஸ்மேன்களில் தவான் மிகவும் ஸ்டிராங்கான வீரர். இதுவரை டி20யில் சதம் அடிக்காவில்லை. ஆனால், அவரது ஆட்டம் உண்மையிலேயே அணிக்கு பலன் தருவதாக இருக்கும்’’ என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close