உலக டி20 போட்டி: இங்கிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 23 Nov, 2018 08:25 am
wt20-england-win-by-eight-wickets

மகளிர் உலக டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. 

6வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதன் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன்மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றன. 

மகளிர் உலக கோப்பை அரை இறுதி ஆட்டம் நள்ளிரவில் தொடங்கியது. இந்திய நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி- ஆஸ்திரேலியா மோதுகின்றன. இதில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை சந்தித்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

 

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு அன்டிகுவாவில் நடைபெற்ற 2வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 112 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அடுத்ததாக களமிறங்கிய இங்கிலாந்து 17.1ஓவரில் இலக்கை எட்டியது. இதனால் அந்த அணி இந்தியாவை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் சென்றது. அந்த அணியின் எமிஜோன்ஸ் மற்றும் நட்டாலி எடுத்த அரைசதம் அந்த அணியின் வெற்றிக்கு சாதகமாக இருந்தது. 

இந்திய அணி தான் மோதிய 4 ‘லீக்‘ ஆட்டங்களிலும் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. 2017 உலக கோப்பை மகளிர் தொடரிலும் இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்திருந்தது. 

newsmt.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close